நீங்க விஜய்க்கு அம்மாவாக நடிக்கணும் !..  ஜோதிகாவுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்…

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் விஜய்தான். தொடர்ந்து விஜய் வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது கொடுத்த வெற்றிக்கு பிறகு தற்சமயம் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

 லியோ திரைப்படத்திற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜன் திரைப்படங்களுக்கு மக்கள் அதிக விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு பிறகு விஜய் எந்த திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

 அதற்கு பதில் அளிக்கும் வகையில் இடையில் வெளியான அப்டேட்டின் படி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அடுத்த திரைப்படம் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஜோதிகாதான் கதாநாயகி என்று ஒரு பேச்சும் இருந்தது ஏற்கனவே ஜோதிகாவுடன் விஜய் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன என்பதால் இந்த காம்பினேஷன் ஒர்க்அவுட் ஆகும் என்று நினைத்தனர்.

 ஆனால் இந்த திரைப்படத்தில் மொத்தம் இரண்டு விஜய் கதாபாத்திரம் இருப்பதாகவும் அப்பா விஜய்க்கு ஜோடியாகதான் ஜோதிகா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எனவே மகன் விஜய் கதாபாத்திரம் ஜோதிகாவை அம்மா என்று அழைப்பது போன்ற காட்சிகள் இடம் பெறும் இதை அறிந்த ஜோதிகா இந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார் இந்த நிலையில் படத்தில் கதாநாயகியாக சினேகாவை நடிக்க வைப்பதாக பேச்சுக்கள் உள்ளன.