மலையாள சினிமாவில் அதிகமாக பேசப்பட்ட ஒரு விஷயமாக நடிகை பாவனாவை காரில் கடத்திய செய்திதான் இருந்து வந்தது. அந்த நிகழ்வு நடந்த பிறகுதான் கேரளா அரசு ஹேமா கமிட்டி என்கிற அமைப்பை நிறுவி அதன் மூலமாக கேரளா சினிமாவில் நடக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து அலச துவங்கியது.
இந்த நிலையில் இது எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளியாக இருந்தது நடிகை மஞ்சு வாரியர் என்று கூறப்படுகிறது. நடிகை மஞ்சு வாரியர் திலீப் குமார் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

அவரை திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார் மஞ்சு வாரியார். இந்த நிலையில் மஞ்சு வாரியருக்கு நெருங்கிய தோழிகளாக இருவர் இருந்தனர். காவியா மாதவன் என்கிற நடிகையும் நடிகை பாவனாவும் இவருக்கு தோழிகளாக இருந்து வந்தனர்.
சொந்த வாழ்க்கையில் வந்த பிரச்சனை:
இந்த நிலையில் காவியா மாதவனுக்கும் நடிகை மஞ்சுவாரியரின் கணவர் திலிப் குமார்க்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த பாவனா மஞ்சுவாரியரிடம் அதை தெரிவித்திருக்கிறார். அதற்கு பிறகுதான் மஞ்சுவாரியார் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
தனது மனைவி பாவனாவால் தான் தன்னை விவாகரத்து செய்தார் என்பதை அறிந்த திலிப் குமார் அதற்குப் பிறகு ஆள் வைத்து பாவனாவை கடத்தி இருக்கிறார். இவ்வளவு பிரச்சனைகள் நடந்த பிறகும் மஞ்சு வாரியர் திரும்ப சினிமாவிற்கு வந்தபோது கேரள சினிமா அவரை வரவேற்றது. இப்பொழுது மீண்டும் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார்.