Connect with us

மறுபடியும் ஒர்க் அவுட்ல இறங்கியாச்சு? –  ரித்திகா வெளியிட்ட ஜிம் புகைப்படங்கள்

News

மறுபடியும் ஒர்க் அவுட்ல இறங்கியாச்சு? –  ரித்திகா வெளியிட்ட ஜிம் புகைப்படங்கள்

Social Media Bar

விளையாட்டு வீரங்கணையாக இருந்து அதையே பயன்படுத்தி தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆனவர் ரித்திகா சிங்.

2016 ஆம் ஆண்டு தமிழில் இறுதி சுற்று எனும் படத்தில் பாக்சிங் செய்யும் பெண்ணாக அறிமுகமானார். நிஜ வாழ்க்கையிலேயே இவர் குத்து சண்டை வீரர் என்பது பலருக்கும் இந்த படத்தின் மீது ஆர்வம் வர காரணமானது. இதனால் முதல் படத்திலேயே இவர் வரவேற்பை பெற்றார்.

அதற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரமாக நடித்ததால் இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

இதனை தொடர்ந்து வெளிவந்த சிவலிங்கா திரைப்படத்தில்தான் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடிக்க துவங்கினார் ரித்திகா. அதன் பிறகு சில படங்கள் நடித்தார். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தற்சமயம் வணங்காமுடி படத்திலும் பாக்ஸர் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இதற்காக மீண்டும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம் சென்றிருக்கும் ரித்திகா அந்த புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டார்.

To Top