Connect with us

லோகேஷ் கனகராஜ் எடுக்குற படங்கள் எனக்கு பிடிக்காது!.. நடிகை சச்சு ஓப்பன் டாக்..

lokesh kanagaraj sachu

Tamil Cinema News

லோகேஷ் கனகராஜ் எடுக்குற படங்கள் எனக்கு பிடிக்காது!.. நடிகை சச்சு ஓப்பன் டாக்..

லோகேஷ் கனகராஜ் எடுக்குற படங்கள் எனக்கு பிடிக்காது!.. நடிகை சச்சு ஓப்பன் டாக்..

Social Media Bar

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை குமாரி சச்சு. இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாநாயகியாக நடித்துள்ளார். தற்சமயம் சினிமா எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறிய பதில்கள் யோசிக்க கூடியதாக இருந்தது சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் அனைத்து வகையான திரைப்படங்களும் வந்தன குடும்ப படங்கள் சண்டை படங்கள் என எல்லா படங்களுக்குமே மக்கள் மத்தியில் வரவேற்பும் இருந்தது.

உதாரணமாக இயக்குனர் விக்ரமன்iன் திரைப்படங்கள் அனைத்துமே குடும்பங்கள் பார்க்கக்கூடிய திரைப்படங்களாகத்தான் இருக்கின்றன. வானத்தைப்போல, சூரியவம்சம் போன்ற திரைப்படங்களில் பெரிதாக எந்த கமர்சியல் கதைகளோ அல்லது பெரும் வில்லனை எதிர்ப்பது போன்ற கதைகளாக இருக்காது.

இருந்தாலும் அந்த படங்கள் எல்லாம் பெரும் வெற்றி பெற்றவை ஆனால் தற்சமயம் வருகிற திரைப்படங்கள் அனைத்தும் அதிகமான வன்முறை காட்சிகளுடன் வருகின்றன.

உதாரணமாக நெல்சன் இயக்கிய ஜெயிலர் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் இவற்றில் எல்லாம் அதிகமான ரத்த காட்சிகளும் வன்முறைகளும் இருப்பதை பார்க்க முடிகிறது. இது குறித்து நடிகை சச்சு கூறும் பொழுது இப்படியான படங்களை எனக்கு பிடிப்பதில்லை.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் இப்படித்தான் படங்கள் வருகின்றன. இவர்கள் எல்லாம் மக்கள் அதைதான் ரசிப்பதாக கூறுகிறார்கள் ஆனால் நான் என்னை சுற்றியுள்ளவர்களிடம் கேட்ட வரையில் அனைவருக்கும் வன்முறை படங்கள் பிடிப்பதில்லை ஆனால் தொடர்ந்து அந்த படங்கள் வெளியாவதால் வேறு வழியின்றி அதை பார்க்கின்றனர் என்று பதில் அளித்துள்ளார் சச்சு.

To Top