News
சாதி பெயரெல்லாம் வேண்டாம் என் பெயரை சொல்லி கூப்பிடுங்க போதும்! – ஓப்பன் டாக் கொடுத்த தனுஷ் பட நடிகை!
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சம்யுக்தா மேனன். 2019 இல் ஜூலை காற்றில் என்கிற திரைப்படம் மூலம் பிரபலமானவர்.

அதற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருவதுடன் நடித்தும் வருகிறார். இதுவரை 19 படங்களில் நடித்துள்ளார். அதில் இவர் பிரத்திவ் ராஜூடன் நடித்த கடுவா என்னும் மலையாள படம், தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்த பீம்லா நாயக் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றவை.
இந்த நிலையில் தற்சமயம் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் வாத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தென்னிந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் போட்டுக்கொள்ளும் வழக்கு ஒழிந்துள்ளது.
இந்த விஷயம் சம்யுக்தாவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே இனி எனது சாதி பெயரை நான் பயன்படுத்துவதாக இல்லை. என்னை வெறும் சம்யுக்தா என்று அழைத்தாலே போதும் என கூறியுள்ளார். இது தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
