17 வயதிலேயே தேசிய விருது வாங்கிய தமிழ் நடிகை!.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்!..
இப்போதெல்லாம் சினிமாவில் நடிகைகளுக்கு பெரிதாக கதாபாத்திரங்கள் கூட இருப்பதில்லை அதனால் அவர்களுமே நடிப்புக்கு பெரிதாக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் ஒரு நடிகர் எந்த அளவிற்கு நடிக்கிறார்களோ அதே அளவிற்கு நடிகையிடமும் எதிர்பார்ப்புகள் இருந்தன.
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளுக்குதான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தன. அப்படி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை ஷோபா. 1965 இல் நாணல் என்கிற திரைப்படம் மூலமாக இவர் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு கன்னடா என்று நான்கு மொழிகளிலுமே திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஷோபா. மிகக் குறுகிய காலகட்டங்களில் எக்கச்சக்கமான படங்களில் இவர் நடித்தார். குறிப்பாக மலையாளத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த நிழல் நிஜமாகிறது முள்ளும் மலரும் போன்ற படங்கள் முக்கியமானவை.

மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் ஷோபா. அப்பொழுது அவரது நடிப்பை பார்த்து தென்னிந்திய சினிமாவே ஆச்சரியப்பட்டது என்றும் கூறலாம். தன்னுடைய 17 ஆவது வயதிலேயே தேசிய விருது பெற்ற நடிகை வேறு யாருமில்லை நடிகை ஷோபாதான்.
புகழ் எவ்வளவுக்கு அதிகமாக வருகிறரதோ அதை அளவிற்கு இழப்புகளும் நடக்கும் என்பது போல மிக சீக்கிரமாகவே தற்கொலை செய்து இறந்துவிட்டார் ஷோபா. கலை உலகத்திற்கு சோபாவின் இறப்பு பெரும் இழப்பு என்றாலும் கூட அந்த குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகளை பிறகு யாராலும் முறியடிக்க முடியவில்லை. ஆமாம் இப்போது வரை 17 வயதில் தேசிய விருது பெற்ற இன்னொரு நடிகையையோ நடிகரையோ தமிழ் சினிமா பார்க்கவில்லை என்று கூறலாம்