கையில் வெட்டு கன்னத்தில் அறை.. விஜய் படத்தில் நடிகைக்கு நடந்த கொடுமை.!

தமிழில் முண்ணனி நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஸ்ரீ ரஞ்சனி. இவர் பல நடிகர் நடிகையருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சீரியல் சினிமா என இரண்டு துறைகளிலுமே இவர் பிரபலமானவராக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பொதுவாகவே சண்டை காட்சிகள் எடுக்கும்போது அசாம்பாவிதங்கள் நடப்பது இயல்புதான் அப்படியாக தனக்கு நடந்த அசாம்பிவிதங்களை கூறியுள்ளார் நடிகை ஸ்ரீ ரஞ்சனி.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் திரைப்படத்தில் நடிகைக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தது மிகவும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரீ ரஞ்சனி.

மேலும் அவர் கூறும் பொழுது போக்கிரி திரைப்படத்தில் நடிக்கும் போது சில அசம்பாவிதங்களை சந்திக்க வேண்டி இருந்தது போக்கிரி திரைப்படத்தில் ஒரு காட்சியில் வில்லன் வேகமாக வந்து என்னை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

Social Media Bar

அதில் நடிக்கும் போது வில்லன் தவறுதலாக உண்மையாகவே என்னை அடித்துவிட்டார். இதனால் எனக்கு மயக்கமே வந்துவிட்டது பிறகு பிரபு தேவா மாஸ்டர் வந்து என்னவென்று என்னிடம் கேட்டார்.

அதே மாதிரி ஒரு காட்சியில் காய்கறியை வெட்டிக் கொண்டே அசினிடம் பேச வேண்டும் என்ற ஒரு காட்சி இருந்தது. அப்பொழுது காய்கறியை வெட்டுகிறேன் என்று கையையும் சேர்த்து வெட்டிக் கொண்டேன் என்று போக்கிரி பட அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை ஸ்ரீரஞ்சனி.