தமிழ் சினிமாவில் புன்னகைக்கரசி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டங்களில் இருந்து பெரிதாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தவர்கள் சினேகா.

தமிழில் இவருக்கு நிறைய வரவேற்புகள் இருந்து வந்தது. பெரும்பாலும் நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் தான் அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று ஒரு பேச்சு இருந்து வந்த நிலையில் அதை உடைக்கும் வகையில் இருந்தது சினேகாவின் அணுகுமுறை.

இந்த நிலையில் ஆரம்பத்தில் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்காமல் இருந்தாலும் கூட போக போக சினேகா கவர்ச்சியாக நடிக்க துவங்கினார் சிலம்பாட்டம், புதுப்பேட்டை மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் சினேகாவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தும் காட்சிகள் இருந்தன.

Read More:  அந்த பழக்கத்தால் வாய்ப்பை இழந்த முரளி.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்..!

ஸ்னேகாவுடன் டான்ஸ்:

sneha
sneha
Social Media Bar

அதற்குப் பிறகு பெரிதாக வேறு திரைப்படங்களில் அவரை கவர்ச்சியாக பார்க்க முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்தார் சினேகா. கோடி திரைப்படத்தில் கூட நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக சினேகா நடித்து கொண்டுதான் இருந்தார்.

இப்பொழுதும் நிறைய திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் சினேகா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார் சினேகா.

Read More:  முதல் படத்திலேயே தேசிய விருது பெற இருக்கும் இயக்குனர்கள்..! யார் யார் தெரியுமா?

அப்பொழுது அங்கு ஆடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் சினேகாவுடன் சேர்ந்து ஆட வேண்டும் என்று கேட்டிருந்தார். சினேகாவும் அதற்கு ஒப்புக்கொண்டு அவருடன் நடனமாட சென்றார். அப்பொழுது சினேகாவின் இடுப்பை பிடித்து அந்த நபர் கொஞ்சம் அத்து மீறி நடனமாடி இருந்தார். மேலும் ஸ்னேகாவை அவர் தூக்கி சென்றார். இது சினேகாவின் ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்த வீடியோ மீண்டும் தற்சமயம் ட்ரண்டாகி வருகிறது.

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.