Tamil Cinema News
திருமணத்துக்கு முன்பே அந்த நடிகர் மீது இருந்த ஆசை.. ஓப்பனாக கூறிய நடிகை சினேகா..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து புடவை கட்டி கலாச்சாரமாக நடித்தவர் நடிகை சினேகா. பெரும்பாலும் நடிகைகள் கவர்ச்சி காட்டினால்தான் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று இருக்க முடியும் என்று ஒரு பேச்சு இருந்தது.
ஆனால் நன்றாக நடிக்க தெரிந்தால் போதும். கவர்ச்சி காட்டாமல் கூட சினிமாவில் வரவேற்பு பெற முடியும் என்று நிரூபித்தவர் நடிகை சினேகா ஆரம்பகால கட்டத்தில் அப்பொழுது இருந்த இளம் நடிகர்களுடன் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தார் சினேகா.
வாய்ப்பை பெற்ற சினேகா.
அதற்குப் பிறகு சூர்யா சிம்பு மாதிரியான நடிகர்களுடனும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வயதாகாமல் இருக்கும் நடிகை சினேகா என்று கூறலாம். இளமையில் எப்படி இருந்தாரோ இன்னமும் இன்னுமும் அப்படியே இருந்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு சினேகா சினிமா ஆர்வம் இல்லாமல் இருந்தார். மேலும் சினிமாவை விட்டு விலகிவிட்டார் ஏதாவது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் மட்டும் நடிப்பது என்று இருந்து வந்தார் சினேகா.
சமீபத்தில் விஜய் கதாநாயகனாக நடித்த கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் திருமணத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் எந்த நடிகர் மீது அதிகமாக ஈர்ப்பு கொண்டு இருந்தீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சினேகா எனது தங்கை நடிகர் விஜய்யின் பெரிய ரசிகையாக இருந்து வந்தார். நான் திருமணத்திற்கு முன்பு பெரும் ரசிகராக தல அஜித்துக்கு தான் இருந்தேன் என்று கூறியிருக்கிறார் சினேகா.