News
பெண்கள் ஒழுங்கா இல்லாமல் ஆண்களை எப்படி குறை சொல்லலாம்!.. நேரடியாக கேட்ட நடிகை ஊர்வசி!.
Actress oorvasi : நடிகை ஊர்வசி பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். தமிழ் சினிமாவில் மனோரமா கோவை சரளா போலவே காமெடி நடிகையாக வலம் வந்தவர்தான் ஊர்வசி. ஊர்வசியின் நகைச்சுவைகளுக்கு இப்போதும் கூட மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையவில்லை என்று கூறலாம்.
இப்போதும் அவர் மூக்குத்தி அம்மன், சிவா மனசுல சக்தி மாதிரியான திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் போது சிறப்பாக காமெடியை வெளிப்படுத்துவதை பார்க்க முடியும்.

இத்தனைக்கும் இந்த இரண்டு திரைப்படங்களிலும் காமெடிக்கு என்று சில நடிகர்கள் இருக்கும் பொழுதும் ஊர்வசியின் காமெடி அதில் தனித்துவமாக தெரியும். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பெண்கள் குறித்து பேசும் பொழுது ஆண்களுக்கு ஆதரவாக சில விஷயங்களை ஊர்வசி பேசியிருந்தார்.
பெண்கள் குறித்து ஊர்வசி:
அதில் ஊர்வசியிடம் கேள்வி கேட்கும் தொகுப்பாளர் கூறும் பொழுது பெண்களுக்கு இலவச பேருந்து என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்குப் பிறகு நான் பேருந்துகளில் ஏறும் பொழுது எனக்கு ஆண்கள் அமர்வதற்கு இடம் தருவதில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஊர்வசி கூறும் பொழுது விமான நிலையங்களில் விமானத்தில் ஏறுவதற்கு அந்த ரன்வேவிற்கு செல்வதற்கு ஒரு பேருந்தில் அனைவரையும் அழைத்து செல்வார்கள். அப்பொழுது வயதானவர்கள் பலர் அந்த பேருந்தில் நின்று கொண்டிருப்பார்கள்.

ஆனால் அவர்களுக்கு பெண்கள் யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள் ஆனால் ஆண்கள் எழுந்து இடம் கொடுப்பார்கள். இதை நான் அதிக முறை பார்த்திருக்கிறேன். அதேபோல சாலையை கடக்கும் பொழுது மொபைல் போனை பேசிக்கொண்டு சுற்றி என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் நடந்து செல்வது பெரும்பாலும் பெண்களாகதான் இருக்கிறது.
ஆண்கள் பெண்களுக்கு இடம் தருவதில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் பேருந்தில் பெண்களே பெண்களுக்கு இடம் தர மாட்டார்கள் என்பது தெரியுமா எனவே நாம் ஆண்களை அப்படி குறை சொல்லி விட முடியாது என்று கூறுகிறார் நடிகை ஊர்வசி.
