Actress
மாடர்ன் ட்ரெஸ்ஸில் இது வேற லெவல்! – அதிதி ராவின் புது கெட்டப்!
பல வருடங்களாக பாலிவுட் சினிமாவில் இருந்துவிட்டு பிறகு கோலிவுட்டில் வந்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. ஹிந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்தார்.

தொடர்ந்து ஹிந்தியில் வாய்ப்புகளை பெற்று வந்த அதிதி ராவ் தமிழில் காற்று வெளியிடை திரைப்படம் மூலமாக அறிமுகமானார். காற்று வெளியிடை திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கினார். ஆனால் காற்று வெளியிடை பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. இதனால் அந்த படம் அதிதிக்கு சிறப்பாக அமையவில்லை.

செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் மணிரத்னம். செக்க சிவந்த வானம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதிதிக்கும் தமிழில் வரவேற்பு கிடைக்க துவங்கியது.

இதையடுத்து சைக்கோ, ஹே சினாமிகா என வரிசையாக தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். இந்த இரண்டு படங்களுமே இவருக்கு நல்ல படங்களாக அமைந்தன. இந்நிலையில் தற்சமயம் நடிகர் சித்தார்த்தை இவர் காதலித்து வருகிறார்.

இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில தற்சமயம் வைரல் ஆகி வருகின்றன.
