கட்டா குஸ்தி கதாநாயகியின் காதல் கதை –  திடுக்கிட வைத்த புகைப்படம்!

கடந்த ஆறு மாதங்களாக தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கதாநாயகி ஐஸ்வர்யா லெக்சுமி.

தமிழில் இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆக்‌ஷன் திரைப்படத்தில் இவருக்கு சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. ஆனால் ஜகமே தந்திரம் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.

அதை தொடர்ந்து வரிசையாக படம் நடித்து வந்தவருக்கு பொன்னியின் செல்வன் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த பூங்குழலி கதாபாத்திரம் அனைவரது மனதிலும் அப்படியே பதிந்துவிட்டது.

அதை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்று வரும் ஐஸ்வர்யாவிற்கு அடுத்த படமான கட்டா குஸ்தியும் கூட முக்கியமான படமாக அமைந்தது. இதையடுத்து தமிழ்நாடு அளவில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் வர துவங்கினர்.

Social Media Bar

இந்த நிலையில் தற்சமயம் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா லெட்சுமி. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருக்கலாம். அதை வெளிப்படுத்தவே இவர் புகைப்படம் வெளியிட்டுள்ளார் என சினி வட்டாரத்தில் பேசப்படுகிறது.