ரீல் பெட்டி வரலைனா தியேட்டர் காலி!.. நடுரோட்டில் காரில் சிக்கிய அமீர்!.. சிறப்பான சம்பவம்தான்!..

director bala and Ameer : தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனரானவர் அமீர் சுல்தான். அமீர் முதலில் இயக்குனர் பாலாவுடன்தான் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். ஆனால் சேது படத்தின் படப்பிடிப்பு நடந்தப்போதே பாலாவுக்கும் அமீருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் பாதியிலேயே விலகிவிட்டார் அமீர்.

ஏனெனில் அவர் பாலாவுடன் நண்பர் போலதான் பழகி வந்தார். இந்த நிலையில் படக்குழு சேது படத்தை முக்கியமாக மதுரையில் போட வேண்டும் என நினைத்தனர். ஏனெனில் பாலாவிற்கு சொந்த ஊர் மதுரை. மதுரையில் பாலாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சேது படத்தை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.

Social Media Bar

ஆனால் அந்த படத்தின் பெட்டியே சென்னையில் தாமதமாகதான் கிளம்பியது. அதனால் ஓட்டுனருடன் சேர்ந்து அமீரும் காரில் வந்தார். அதற்குள் கண்டிப்பாக பெட்டி வரும் என திரையரங்கிடம் பேசியிருந்தனர். ஆனால் விடியற் காலையில் கார் பஞ்சராகி நின்றுவிட்டது. அதன் பிறகு அமீர் ஓட்டுநரோடு சேர்ந்து பஞ்சரை அங்கேயே பழுதுபார்த்து காரை கிளப்பியுள்ளனர்.

காலை 10 மணியாகியும் ரீல் பெட்டி வரவில்லை. இருந்தாலும் பாலாவின் அணியினர் திரையரங்கிற்கு டிக்கெட் போடும்படி கூறினர். 10.30 மணிக்கு படத்தை போட வேண்டும். இல்லையென்றால் மக்கள் திரையரங்கை அடித்து உடைத்து விடுவார்கள். ஆனால் பெட்டி 10.30 மணிக்கு வரவில்லை. மக்கள் பொறுமை இழந்த கணத்தில் 10.50க்கு பெட்டியுடன் வந்தார் அமீர்.

அவ்வளவு கடினப்பட்டு கொண்டு வந்துதான் எங்களது முதல் படம் சேது முதல் ஷோ வெளியானது என பேட்டியில் கூறியுள்ளார் அமீர்!..