எங்க அப்பாவோட கோர்த்து விடாதீங்க பாஸ்!.. இளையராஜாவிற்கு பயந்து காணாமல் போன யுவன்!.. அமீர்தான் காரணம்!.

Ilayaraja and Yuvan Shankar Raja : இளையராஜாவிற்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்தப்போது புதிய இசைகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கின.  அதை ஈடு செய்வதற்கு ஏ.ஆர் ரகுமான் புதிய இசையை கொண்டு வந்திருந்தார்.

இந்த நிலையில்தான் இளையராஜாவிற்காக அவரது மகன் யுவன் சங்கர் ராஜா களம் இறங்கினார். ஏ.ஆர் ரகுமான் இசைக்கு நிகரான மற்றொரு புது இசையை யுவன் சங்கர் ராஜா அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து இப்போது வரை யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கும், ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களுக்கும் இடையேதான் சண்டை இருந்து வந்தது.

ameer
ameer
Social Media Bar

இயக்குனர் அமீருக்கும் யுவன்சங்கர் ராஜாவிற்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. இந்த நிலையில் பருத்திவீரன் திரைப்படத்தில் அறியாத வயசு, புரியாத மனசு என்கிற பாடலை இளையராஜா பாட வேண்டும் என யுவன் சங்கர் ராஜாவிடம் கேட்டுள்ளார் அமீர்.

ஆனால் யுவன் சங்கர் ராஜாவிற்கு அதில் விருப்பமில்லை. ஏனெனில் அமீர் எந்த ஒரு பாடகராக இருந்தாலும் அவர்களிடம் பாடும்போது குறை கூறிக்கொண்டே இருப்பார். தனது தந்தையிடமும் அப்படி கூறுவார் என பயந்தார் யுவன். ஆனால் இந்த விஷயத்தை அறியாத இளையராஜா அந்த பாடலை பாடுவதற்கு ஒப்புக்கொண்டார்.

இதை அறிந்த யுவன் சங்கர் ராஜா, அன்று ரெக்கார்டிங் தியேட்டருக்கே வரவில்லை. ஆனால் அமீர் இளையராஜாவிடம் எந்த குறையும் கூறவில்லை. இருந்தாலும் அமீர் எதாவது பிரச்சனை செய்துவிடுவார் என பயந்து அங்கிருந்து சென்றுவிட்டார் யுவன். இதனை அமீர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.