அமெரிக்காவில் அன்னைக்கு ஒருத்தர் கூட வீட்டுக்கு வெளியில் வரலை.. ஸ்தம்பிக்க வைத்த ஒரு டிவி நிகழ்ச்சி.. என்ன தெரியுமா?
பொதுவாக டிவி சீரியல்கள் என்பது எல்லா நாடுகளிலும் பிரபலமானதாகதான் இருக்கும். தமிழில் கூட மெட்டிஒலி கோலங்கள் மாதிரியான நிறைய சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துள்ளன.
ஆனால் ஒரு டிவி சீரியலை பார்ப்பதற்காக நாடே ஸ்தம்பித்த சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. செயின்ஃபீல்டு (Seinfeld) என்கிற ஒரு சீரிஸ் அமெரிக்காவில் மிகப் பிரபலமான டிவி சீரியஸாக இருந்தது.
அமெரிக்க சீரியல் செய்த வேலை:
ஒன்பது வருடங்கள் தொடர்ந்து இது ஒளிபரப்பாகி வந்தது. இதில் கடைசி எபிசோடானது 1998 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. அந்த சமயத்தில் மக்கள் அனைவரும் எப்படி இந்த சீரிஸ் முடியப்போகிறது என்று அதிக ஆவல் காட்டி வந்தனர்.
இதனால் அன்றைய தினம் மொத்த அமெரிக்காவும் ஊரடங்கு அறிவித்தது போல அமைதியாக காணப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. பொதுமக்கள் வெளியில் பார்க்கவே முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அவ்வளவு பேரும் டிவி முன்பு அமர்ந்து இறுதி எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்பதற்காக ஆவலாக இருந்துள்ளனர் இந்த நாளில் ஒரு நபருக்கு இதய மாரடைப்பு ஏற்பட்டு அவரை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வெறும் 4 நிமிடத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறது.
இது ஒரு உலக சாதனையாகவும் பதிவாகி இருக்கிறது ஏனெனில் எங்குமே மக்களின் கூட்ட நெரிசலும் வாகன நெரிசலும் இல்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸ் அவ்வளவு வேகமாக சென்று இருக்கிறது. இந்த அளவிற்கு அமெரிக்காவில் ஒரு பெரிய சாதனையை செய்திருக்கிறது இந்த டிவி சீரியல்