Connect with us

கஜினி படத்தின் அடுத்த பாகத்துக்கு ப்ளான்.. முதல் பாக பிரச்சனையே இன்னும் தீரல.. ஏ.ஆர் முருகதாஸ்க்கு பிரச்சனை வருமா?.

ar murugadoss

Tamil Cinema News

கஜினி படத்தின் அடுத்த பாகத்துக்கு ப்ளான்.. முதல் பாக பிரச்சனையே இன்னும் தீரல.. ஏ.ஆர் முருகதாஸ்க்கு பிரச்சனை வருமா?.

Social Media Bar

தமிழில் அரசியல் விஷயங்களை படமாக்க கூடிய மிக முக்கியமான இயக்குனராக ஏ.ஆர் முருகதாஸ் இருந்து வருகிறார். அதே சமயம் காலம்காலமாக ஏ.ஆர் முருகதாஸ் ஒரு காப்பி இயக்குனர் என்கிற பெயரும் சினிமாவில் இருந்து வருகிறது.

அவர் எடுக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு படத்தின் காப்பியாக இருக்கும் என்று ஒரு பேச்சு உண்டு. அதேபோல சில நபர்களின் கதைகளை எடுத்தும் இவர் படமாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு ரமணா படத்தின் கதை இயக்குனர் நந்தகுமாரனின் கதை என்று கூறப்படுகிறது. அவரே இதை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த மாதிரி அவர் வேறு கதைகளை எடுத்து படமாக்குகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.

ஏ.ஆர் முருகதாஸ் திட்டம்:

அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் கஜினி திரைப்படம் இருந்து வருகிறது. கஜினி திரைப்படத்தின் முதல் பாகம் ஹாலிவுட் இயக்குனரான கிரிஸ்டோபர் நோலன் என்கிற இயக்குனர் இயக்கிய மொமெண்டோ என்கிற திரைப்படத்தின் காப்பியாகும்.

அந்த திரைப்படத்தின் கதையின் உரிமத்தை பணம் கொடுத்து வாங்காமல் அப்படியே எடுத்து வைத்திருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். இந்த பிரச்சனை அப்பொழுதே பெரிதாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் இப்பொழுது கஜினி 2 திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சூர்யாவை சந்தித்து பேசி உள்ளதாகவும் புறப்படுகிறது.

முதல் பாகத்தை பொருத்தவரை அந்த படம் வெளியான பொழுது அதன் அந்த கதையின் உரிமையாளரான கிறிஸ்டோபர் நோலனுக்கு இந்த விஷயம் தெரியவில்லை மிக தாமதமாக தான் அது அவருக்கு தெரிந்தது. இது குறித்து அவர் ஒரு பேட்டியிலும் பேசியிருந்தார்.

இந்த நிலையில் கஜினி 2 படம் எடுக்கப்படுகிறது என்றால் கண்டிப்பாக அவரிடமிருந்து முருகதாஸுக்கு பிரச்சனை வரும் என்று கூறப்படுகிறது.

To Top