படிப்பு முக்கியமில்லன்னு சொல்றவங்களை நம்பாதீங்க!.. ஜோவிகாவை நேரடியாக தாக்கிய ஏ.ஆர் முருகதாஸ்!.. அட கொடுமையே…
Director AR Murugadoss: தமிழில் வெற்றி படங்களாக கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.ஆர் முருகதாஸ். அவர் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படமானது அனைவரும் ஏ.ஆர் முருகதாஸை திரும்பி பார்க்க வைக்கும் திரைப்படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸிற்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது. தொடர்ந்து பல வகையான கதை அம்சங்களை கொண்டு படங்களை இயக்க துவங்கினார் ஏ.ஆர் முருகதாஸ். அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய இரு திரைப்படங்கள் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இதற்கு இடையே ஒரு பேட்டியில் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது சமீபத்தில் படிப்பு முக்கியம் கிடையாது படிப்பு இல்லாமல் சாதித்தவர்களும் இருக்கிறார்கள் என காமராஜரையும் சச்சின் டெண்டுல்கரையும் காட்டுகிறார்கள். அப்படி பேசுபவர்களை நம்பாதீர்கள்.

இதுக்குறித்து ஒரு வீடியோவில் என் நண்பர் அருமையாக கூறியிருப்பார். படிக்காமல் சாதித்தவன் 10 பேரை நீங்கள் காட்டினால் படித்து சாதித்த 100 பேரை என்னால் காட்ட முடியும் என்பார். எனவே ஒரு வழக்கறிஞராகவோ அல்லது டாக்டராகவோ நீங்கள் ஆக வேண்டும் என நான் கூறவில்லை.
ஆனால் அவர்கள் கூறுவதை புரிந்துக்கொள்ளவாவது நீங்கள் படித்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகாதான் படிப்பு முக்கியமில்லை என கூறி வந்தார். அதற்கு எதிராகதான் ஏ.ஆர் முருகதாஸ் இப்படி பேசியுள்ளார் என கூறப்படுகிறது.