Cinema History
நீங்க பாடுறதே சரி இல்ல! – எம்.எஸ்.வியை பாடாய் படுத்திய ஏ.ஆர் ரகுமான்! – எந்த பாட்டு தெரியுமா?
தமிழில் முன்னணி இசை அமைப்பாளர்களில் முக்கியமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். 90களில் துவங்கி இப்போது வரை ஏ.ஆர்.ரகுமான் இசைக்கு இருக்கும் மவுசு குறையவே இல்லை. ஏ.ஆர்.ரகுமான் மிகச்சிறு வயதிலேயே சினிமாத்துறைக்கு இசையமைக்க வந்து விட்டார்.
ரோஜா திரைப்படத்திற்கு இசையமைக்கும் பொழுது ஏ ஆர் ரகுமானுக்கு 17 வயதே நிறைவடைந்து இருந்தது. ஆனாலும் அவரது இசை இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தது. இதனால் பெரும் இசையமைப்பாளர்கள் பாடல் ஆசிரியர்கள் கூட ஏ ஆர் ரகுமானுடன் பணிபுரிய வேண்டி இருந்தது.
சங்கமம் திரைப்படத்தில் மணித்துளி மணித்துளி என்னும் பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் பொழுது அதில் சில வரிகளை இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் பாடினார். அப்போது எம் எஸ் வி பாடும் பொழுது அதை எப்படி பாட வேண்டும் என்று ஏ ஆர் ரகுமானிடம் விளக்கம் கேட்டார்.
எனக்கு மூத்தவரான உங்களுக்கு நான் எப்படி பாடச் சொல்லித் தர முடியும் என்று ஏ.ஆர்.ரகுமான் அதற்கு பதில் அளித்தார். ஆனால் எம் எஸ் வி இசையமைப்பாளர்கள் என்றால் பாடுபவர்களுக்கு சொல்லி தந்து தான் ஆக வேண்டும் எனவே எப்படி பாட வேண்டும் என்று சொல் என்று கூறியுள்ளார்.
ஏ ஆர் ரகுமானும் அந்த பாடலை எப்படி பாட வேண்டும் என்பதை கூறியுள்ளார் எம் எஸ் வி அதற்கு தகுந்தார் போல அந்த பாடலை பாடியுள்ளார். ஆனால் மூன்று நான்கு முறை எம் எஸ் வி பாடிய பிறகும் அந்த பாடல் ஏ ஆர் ரகுமானுக்கு பிடித்தாற்போல போல அமையவில்லை. எப்படியோ ஒரு வழியாக ஏ ஆர் ரகுமானுக்கு பிடித்த மாதிரி எம் எஸ் வி பாடிவிட்டார். பாடலை பாடி முடித்த பிறகு அந்த பாடலை கேட்க வேண்டும் என கேட்டுள்ளார் எம் எஸ் வி.
ஆனால் அதில் இசை வேலைகள் இருப்பதால் இப்பொழுது நீங்கள் கேட்க முடியாது என கூறிவிட்டார் ஏ.ஆர் ரகுமான். வெகு நாட்களுக்குப் பிறகு அந்தப் பாடலை எம் எஸ் வி வானொலியில் கேட்ட பொழுது அவர் பாடியதில் இருந்து முழுவதுமாக அந்த பாடல் வேறுபட்டு இருந்ததை பார்த்தார் அப்பொழுதுதான் ஏ ஆர் ரகுமானின் திறமை என்னவென்று எம்எஸ்விக்கு தெரிந்தது இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்