Tamil Trailer
பார்க்க மிஷின் இம்பாசிபல் மாதிரி இருக்கு.. வெளியான மிஸ்டர் எக்ஸ் பட ட்ரைலர்.!
நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் உருவான திரைப்படம்தான் மிஸ்டர் எக்ஸ் சமீப காலங்களாகவே ஆர்யா படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் என்பது இல்லாமல் இருந்து வந்தன.
இந்த நிலையில் ஹாலிவுட் கதை அமைப்பில் உருவான திரைப்படமாக மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இருப்பதை பார்க்க முடிகிறது. படத்தின் கதைப்படி இந்தியாவுக்காக வேலை செய்யும் ஒரு ரகசிய உளவு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பின் தலைவராக ஆர்யா இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த குழு செய்யும் சாகசங்களே கதையாக இருக்கிறது. மிஷின் இம்பாசிபல் மாதிரியான பல ஹாலிவுட் திரைப்படங்களின் கதை என்பது இதுவாகதான் இருந்துள்ளது.
இந்த படத்தில் மஞ்சு வாரியர், நடிகர் சரத்குமார், நடிகர் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இருந்தாலும் இந்த மாதிரியான கதை களங்களை யாரும் தமிழில் சரியாக படமாக்கியது இல்லை. எனவே இந்த படமாவது நன்றாக இருக்குமா? என்கிற கேள்வி ஒரு பக்கம் எழுந்து வருகிறது.
