”எங்கடா தூக்கிட்டு போற அந்த புள்ளைய..?” – நிவாவை அலேக்காய் தூக்கிய அசல்! Bigg Boss 6!

பிக்பாஸில் பங்கேற்றுள்ள அசல் கோளாறு வீட்டுக்குள் செய்யும் சேட்டைகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் ஷோவின் 6வது சீசன் இரண்டே வாரங்களில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் இடையே நாள்தோறும் ஏதாவது சண்டை, சச்சரவுகள் முளைத்துக் கொண்டே இருக்கிறது.

இவ்வளவு ரணகளத்திலும் கிளுகிளுப்பாக பிக்பாஸ் வீட்டை சுற்றி வருகிறார் அசல் கோளாறு. ஆரம்பம் முதலே பெண்களிடம் இவர் பேசும் விதம் ஆடியன்ஸ் இடையே சர்ச்சையானாலும் பின்னர் அவர் இயல்பே அதுதான் என்பது போல அங்குள்ள சக போட்டியாளர்களே விட்டுவிட்டார்கள்.

குயின்ஸின் கையை தடவுவது, நிவாவிடம் நெருக்கமாக இருப்பது என சேட்டைத்தனமாக சுற்றிவரும் அசல் கோளாறுக்கு கண்டனங்களும், ரசிகர்களும் ஒரே சமயத்தில் உருவாகியுள்ளனர். ஷோவின் ஆரம்பம் முதலே குயின்சியிடமே சேட்டைக் காட்டி வந்த அசலின் பார்வை தற்போது நிவா பக்கம் திரும்பியுள்ளது.

நேற்றைய லைவில் இரவு குயின்சி, நிவா பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அசல், குயின்சி கண் முன்னாலேயே நிவாவை அலேக்காக இடுப்பை பிடித்து தூக்கி கொண்டு சென்றார். இதை பார்த்த குயின்சி மற்றும் சக போட்டியாளர்கள் கொஞ்சமாக ஷாக் ஆனார்கள். இன்னும் என்னவெல்லாம் சேட்டை வேலை காட்டப்போகிறாரோ அசல் என ஆடியன்ஸ் இடையே பேச்சு எழுந்துள்ளது. அசல் இதுபோல நடந்து கொள்வது தவறு எனவும் சிலர் பேசி வருகின்றனர்.

Refresh