Bigg Boss Tamil
சொல்லாமல் எஸ்கேப் ஆன ஜி.பி.முத்து? அதிர்ச்சியில் பிக்பாஸ் வீடு!
பிக்பாஸ் ஷோவின் 6வது சீசனில் பங்கேற்றுள்ள பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஷோவின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசன் தொடங்கும் முன்னரே பலரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட்ட போட்டியாளர் டிக்டாக் பிரபல ஜி.பி.முத்து.

மற்ற எல்லாரையும் விட ஊர்க்காரராகவும், வட்டார வழக்கில் பேசுபவராகவும், வெகுளித்தனமாகவும் உள்ள ஜி.பி.முத்துவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிலசமயம் அவர் டாஸ்க் புரியாமல் நடந்து கொள்வதை சக போட்டியாளர்களும் கூட கேஷூவலாகவே எடுத்துக் கொண்டார்கள்.
ஆனால் கடந்த சில நாட்களாகவே ஜி.பி.முத்து தனது குடும்பத்தின் நினைவால் சோகமாக இருக்கிறார். எப்படியாவது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட நினைக்கிறார். இதனால் சக போட்டியாளர்களை அழைத்து தனக்கு எதிராக ஓட்டு போடுமாறும், எவிக்ஷனுக்கு அனுப்புமாறும் கேட்டு வருகிறார்.
இதை பார்த்த பிக்பாஸ் அவரை தனியாக அழைத்து சமாதானம் செய்ய முயன்று வருகிறார். அவருக்கு பிடித்த உணவை வெளியில் இருந்து கொண்டு வந்து தருவதாக கூட சொல்லியும் ஜி.பி.முத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இந்நிலையில் தற்போது ஜி.பி.முத்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. வார இறுதியில் கமல்ஹாசன் வந்து பேசும்வரை ஜி.பி.முத்துவை இருக்க சொல்லியும் அவர் கேட்காமல் போய்விட்டதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரையிலான லைவில் ஜி.பி.முத்து இருந்து வருகிறார்.
ஒருவேளை ஜி.பி.முத்துவை வெளியே அனுப்ப வேண்டும் என்றாலும் அவர் எவிக்ஷனுக்கு நாமினேட் ஆக வேண்டும், மக்கள் அவருக்கு ஆதரவாக ஓட்டு போடாமல் இருக்க வேண்டும் என பிக்பாஸ் ரூல்ஸ் நிறைய உள்ளது. இந்த ரூல்ஸை மீறி அவரை வெளியே அனுப்பாவர்களா என்ற கேள்வியும் உள்ளது.
