Hollywood Cinema news
அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்ற தனுஷ்..!
நடிகர் தனுஷ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இப்பொழுது அவர் தேர்ந்தெடுத்திருக்கும் திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதைகளை கொண்டதாக இருக்கின்றன. இயக்குனர் மாரி செல்வராஜ், போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா என்று பல முக்கிய இயக்குனர்களுடன் கூட்டணி போட்டிருக்கிறார் தனுஷ்.
தொடர்ந்து இன்னும் 4 முதல் 5 திரைப்படங்களில் இவர் நடிக்க இருக்கிறார். இது இல்லாமல் இரண்டு ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ் கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேவையான படங்களில் ஏற்கனவே அவர் கமிட் ஆகிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
ஆனால் இவருக்கு ஹாலிவுட் வாய்ப்புகள் வர இருப்பதாக கூறப்படுகிறது ஹாலிவுட்ல பெரிதாக எதிர்பார்த்து வரும் திரைப்படம் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே. இந்த திரைப்படத்தில் நடிகர் ராபர்ட் டோனி ஜே.ஆர் வில்லனாக நடிக்கிறார் இந்த படத்தில் சூப்பர் ஹீரோவாக நிறைய பேர் நடிக்க இருக்கின்றனர்.
இதில் நடிகர் தனுஷுக்கும் ஒரு கதாபாத்திரம் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அப்படி தனுஷுக்கு கதாபாத்திரம் இருக்கும் நிலையில் அவரது சினிமா வாழ்க்கையிலே அடுத்த நிலைக்கு கொண்டு போகும் திரைப்படமாக அவெஞ்சர்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
