ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் பப்லு. பப்லு ஆரம்பத்தில் இருந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கின. அதனை தொடர்ந்து சின்ன சின்ன டிவி நிகழ்ச்சிகளில் கூட நடித்து வந்தார் பப்லு. இந்த நிலையில் அவருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு ஹிந்தியில் வெளியான அனிமல் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த திரைப்படம் 1700 கோடி ரூபாய் வரை வெற்றி கொடுத்தது. இந்த நிலையில் அந்த படத்திற்கான வெற்றி விழாவில் கலந்து கொண்டார் பப்லு. அப்பொழுது அங்கு நடந்த நிகழ்வு குறித்து அவர்கள் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறும்போது ”நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது நடிகர் அனில் கபோரும் அந்த விழாவில் இருந்தார். அப்பொழுது மைக்கை வாங்கி அவர் பேசிக்கொண்டிருந்த பொழுது நானும் பேச வேண்டும் என்று மைக்கை அவரிடம் கேட்டேன்.
ஆனால் அவர் என்னிடம் கொடுக்க மறுத்துவிட்டார். இதை சுற்றி இருந்த அனைவரும் பார்த்தனர் எனக்கு ஒரு மாதிரி அவமானமாக ஆகிவிட்டது உடனே அங்கிருந்து வந்த ரன்பீர்கபூர் அவரிடம் மைக்கை வாங்கி என்னிடம் கொடுத்தார் என்று அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் பப்லு.