News
ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சனைக்கும் தனுஷ்தான் காரணம்?. பார்ட்டியில் மனைவி செய்த லூட்டி.. போட்டு உடைத்த பிரபலம்!.
கடந்த ஒரு மாத காலமாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி விவாகரத்து குறித்த விஷயங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆவார்.
பெரும்பாலும் ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் ஒரு காலகட்டங்களில் வெற்றியைதான் கொடுத்துக் கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது எல்லாம் அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வெற்றியே கொடுப்பதில்லை.
விவாகரத்து பிரச்சனை:
மாறாக தோல்வி படங்களாகவே அமைந்து வருகின்றன இந்த நிலையில் ஜெயம் ரவிக்கும் மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து நடக்கப்போகிறது என்கிற செய்தி சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
ஜெயம் ரவி ஆர்த்தி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தி சிறு வயது முதலே செல்வ செழிப்புடன் வளர்ந்தவர் ஆவார். அவர் ஜெயம் ரவியை திருமணம் செய்து கொண்ட பிறகு ஜெயம் ரவியின் மாமியார் தொடர்ந்து ஜெயம் ரவியின் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.

இந்த நிலையில் சமீப காலமாக இவர்கள் இருவரும் பிரிய போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது ஒரு பக்கம் அவரது மாமியார்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் மாமியார் தொடர்ந்து ஜெயம்ரவி படங்களை தயாரித்து வந்தார்.
ஜெயம் ரவிக்கு வந்த சோதனை:
ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை இதனால் தொடர்ந்து நஷ்டத்தை பார்த்து வந்த அவரது மாமியார் சமீப காலமாக ஜெயம் ரவியின் சம்பளத்தை குறைத்திருப்பதாக கூறப்படுகிறது மேலும் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருந்தார்.
அந்த திரைப்படம் ஜெயம் ரவியின் மாமியாரின் காரணமாக கைநழுவி போய்விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயம் ரவியின் மாமியாருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஆனால் அது மட்டுமே விவாகரத்துக்கு காரணம் இல்லை என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது தோழிகளுடன் அடிக்கடி க்ளப் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு முறை க்ளப்பிற்கு செல்லும் பொழுது அப்பொழுது அங்கு தமிழ் பிரபலங்கள் அனைவரும் வந்திருக்கின்றனர் அதில் தனுஷுடன் இவருக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த விஷயங்களை அறிந்த ஜெயம் ரவி தொடர்ந்து ஆர்த்திக்கு இது குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்துள்ளார். ஆனால் இந்த விஷயம் எல்லாம் பணக்கார குடும்பங்களில் சகஜம் என்பதால் இதை ஜெயம் ரவி மாமியார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இந்த நிலையில் தான் அவர் விவாகரத்துக்கு முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.
