கூவத்தூரில் நடிகைகளுக்காக கோடிகளில் செலவு செஞ்சாங்க!.. உண்மையை விளக்கிய பயில்வான் ரங்கநாதன்!..

Bailwan ranganathan : அதிமுகவை சேர்ந்த ஏ.வி ராஜு திரிஷாவை பற்றி அவதூறு பேசியது முதல் கூவத்தூர் பிரச்சனை என்பது தற்சமயம் பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது.

இதனால் கோபம் அடைந்த த்ரிஷா 24 மணி நேரத்திற்குள் பெரும் பத்திரிகைகள் முன்னாள் வந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையான எடுக்கப்படும் என மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே கட்சி ரீதியாக பின்னடைவை கண்டுள்ள அதிமுகவிற்கு இது மேலும் ஒரு பின்னடைவாக அமைந்திருக்கிறது. இதற்கு நடுவே சினிமா பிரபலங்களும் இதற்கு குரல் கொடுக்க துவங்கியிருக்கின்றனர்.

Social Media Bar

இந்த நிலையில்  சினிமா கிசுகிசுவிற்கு பிரபலமான நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசும்பொழுது இது குறித்து மேலும் சில தகவல்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி அமைச்சர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக கூவத்தூரில் அவர்களுக்கு தங்க இடம் ஏற்பாடு செய்து நடிகைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார் என்பது அப்போது பெரிதாக பேச பொருளாக இருந்தது.

இதற்காக கோடிகளில் பணம் புரண்டதாகவும் அதில் கருணாஸ் சில ஏமாற்று வேலைகளை செய்து விட்டார் என்றும் பேச்சுக்கள் அப்பொழுது இருந்தன. ஆனால் அதை அப்பொழுதெல்லாம் பேசாமல் இப்பொழுது வந்து இவர்கள் பேசுவதற்கு காரணம் என்ன என்பதுதான் புரியவில்லை என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

ஆக இதில் ஒரு நடிகை மட்டுமல்ல பல நடிகைகள் ஈடுபட்டு இருக்கின்றனர் என்பது பயில்வான் ரங்கநாதன் கூறியது மூலமாக தெளிவாகிறது.

Source: Link