Connect with us

அஜித் படத்தை ரீமேக் செய்யும் தெலுங்கு சினிமா..! களம் இறங்கிய பாலகிருஷ்ணா..!

Tamil Cinema News

அஜித் படத்தை ரீமேக் செய்யும் தெலுங்கு சினிமா..! களம் இறங்கிய பாலகிருஷ்ணா..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட சினிமா பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். ஆனாலும் கூட சமீப காலமாக அவர் நடிக்கும் சில திரைப்படங்கள் நல்லப்படியான வரவேற்பை பெறுவது இல்லை. இந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி.

இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்த திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் ஓரளவு லாபம் பெற்று கொடுத்தது என்றாலும் கூட அஜித் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பை இந்த படம் மக்களிடம் பெறவில்லை.

குட் பேட் அக்லி திரைப்படமானது ஒரு ஃபேன் பாய் படமாக எடுக்கப்பட்டது. அதனாலேயே பார்ப்பதற்கு ஒரு தெலுங்கு படம் போலவே இருந்தது. இந்த படத்தின் கதை. இந்த நிலையில் இந்த படத்தின் கதையை கேள்விப்பட்டு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அதை பார்த்துள்ளார்.

அவருக்கு இந்த படம் மிகவும் பிடித்துவிடவே இவர் ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்து இதுக்குறித்து பேசியுள்ளார். மேலும் அவர் இதே மாதிரி தெலுங்கு படம் ஒன்றை இயக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாராம். எனவே குட் பேட் அக்லியின் பாலகிருஷ்ணா வெர்ஷன் சீக்கிரமே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Articles

parle g
madampatty rangaraj
To Top