Tamil Cinema News
அந்த புரளிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது… முடிவெடுத்த நடிகர் விஜய்..!
போன வருட துவக்கத்திலேயே நடிகர் விஜய் அரசியலுக்குள் எண்ட்ரி ஆகி தனது கட்சியின் பெயரை மக்களுக்கு அறிவித்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளாக அரசியலில் தொடர்ந்து தனது முன்னேற்றத்தை நோக்கி அவர் பயணித்து வருகிறார்.
இதற்கு நடுவே தனது திரை வாழ்க்கையை பார்க்க முடியாது என்பதால் திரைத்துறையில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். அதற்கு பிறகு அவரது நடிப்பில் கோட் திரைப்படம் வெளியானது. கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படம்தான் நடிப்பார் என கூறியிருந்தார்.
அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம்தான் ஜனநாயகன். இந்த திரைப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என தெரிகிறது. எனவே இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
இதற்கு நடுவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது விஜய்யை வைத்து மாஸ்டர் 2 மற்றும் லியோ 2 இயக்க ஆசை உள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜனநாயகன் விஜய்க்கு கடைசி படம் கிடையாது என ரசிகர்கள் வதந்திகளை பரப்பிவிட்டு வந்தனர்.
ஆனால் இந்த வதந்திகளை கண்டுக்கொள்ளாத விஜய் தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படம் மீதே கவனம் செலுத்தி வருகிறார். எனவே இதன் மூலம் ஜனநாயகன் தான் விஜய்யின் கடைசி படம் என தெளிவாகிறது.
