Special Articles
தனியா பார்த்தா ஆடிப்போக வைக்கும் கொரியன், தாய்லாந்த் பேய் படம் கேள்விப்பட்டுருக்கீங்களா.. சிறப்பான 5 படம் லிஸ்ட்!..
ஹாரர் பேய் படங்களை பொறுத்தவரையில் தமிழ் சினிமாவை விடவும் ஹாலிவுட்டில் பயம் காட்டும் வகையில் இருக்கும் என்பது பலரும் அறிந்த விஷயமே.. ஆனால் ஹாலிவுட்டுக்கே பயம் காட்டும் வகையிலான பேய் படங்கள் உண்மையில் கொரியாவில் வெளியாகின்றன.
பெரும்பாலும் நம் மக்கள் டப்பிங் ஆகி வரும் திரைப்படங்களை பார்ப்பதால் கொரியா, தாய்லாந்து, இந்தோனிசியா ஆகிய பகுதிகளில் வரும் படங்களை பார்ப்பதில்லை. அந்த படங்கள் எல்லாம் தனியாக அமர்ந்து பார்ப்பதற்கே திகிலை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. அப்படியான படங்களைதான் இப்போது பார்க்க போகிறோம்.
Medium
மீடியன் திரைப்படம் தாய்லாந்தில் அதிக வரவேற்பை பெற்ற படமாகும். தாய்லாந்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் வாழ்ந்து வரும் இளம் பெண் மிங்க். நன்றாக இருந்து வரும் இந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக வித்தியாசமாக நடந்துக்கொள்ள துவங்குகிறார்.

ஆரம்பத்தில் பலரும் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர். ஆனால் அவரது உடலில் பேய் குடி கொண்டுள்ளது. பா யெங் என்கிற கடவுள்தான் அந்த கிராமத்து தெய்வமாக இருக்கிறது. அதை கொண்டு மிங்க் உடலில் இருக்கும் பேயை ஓட்ட போகிறார்களா இல்லை மிங்க் ஜெயிக்குமா என்பதுதான் படக்கதை:
Satan slave
வெகு நாட்களாக குழந்தையில்லாத ஜோடி ஒன்று அதற்காக பல கடவுள்களை வணங்குகிறது. அப்படியும் எதுவும் நடக்காதப்போது ஒருவர் சாத்தான் வழிப்பாடு குறித்து இவருக்கு கூறுகிறார். அதனை தொடர்ந்து சாத்தனை வழிபாடு செய்து அவர்கள் ஒரு குழந்தையை பெற்றெடுக்கின்றன.

ஆனால் பிறந்ததே சாத்தானின் குழந்தைதான் என்பது பிறகுதான் தெரிகிறது. பிறகு அந்த குழந்தை செய்யும் விபரீதங்களை வைத்து கதை செல்கிறது.
Satan slave 2
பேய்கள் எல்லாம் குறிப்பிட்ட வருடத்திற்கு ஒருமுறை எழுப்பப்படும் இடம் ஒன்று உள்ளது. அங்கு அது பற்றி தெரியாமல் ஒரு காலணியை கட்டுகின்றனர். அன்றைய தினம் பெரும் வெள்ளம் காரணமாக காலணியில் இருப்பவர்கள் வெளியில் செல்ல முடியாமல் ஆகிவிடுகிறது.

கீழ்தளம் நீரில் மூழ்கி விடுகிறது. அன்று காலையில்தான் அங்கு லிஃப்ட் விபத்துக்க்குள்ளாகி பலர் இறக்கின்றனர். அவர்களது உடல் அவரவர் வீட்டிலேயே உள்ளது. இரவு அந்த உடல்கள் எல்லாம் எழுகின்றன. அவற்றிடம் இருந்து 4 சிறுவர்கள் தப்பிப்பது கதையாக உள்ளது.
Shutter

கல்லூரி படிக்கும் மாணவன் ஒரு பெண்ணை கற்பழித்து அதனை புகைப்படம் எடுத்து வைக்கிறான். இதனால் தற்கொலை செய்துக்கொள்ளும் பெண் அவனை பின்பற்றிக்கொண்டே இருக்கிறது. தமிழில் இந்த படம் சிவி என்கிற பெயரில் வெளியானது.
SEWUDINO

ஒரு பணக்கார குடும்பம் தினசரி பெரும் சம்பளத்துடன் பெண்களை வேலைக்கு எடுக்கிறது. கஷ்டத்தில் இருக்கும் கதாநாயகியும் அந்த வேலைக்கு செல்கிறார். என்ன வேலை என பார்க்கும்போது அந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் உடலில் பேய் உள்ளது.
மாலை குறிப்பிட்ட நேரத்தில் அந்த பேய் அமைதியாக இருக்கும். அப்போது சென்று அதன் உடலை குறிப்பிட்ட தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதை 3 நாட்களுக்கு அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை த்ரிலிங்காக கூறும் கதைதான் இந்த படம்.
