பத்திரிக்கைகாரங்க உங்க நிலையே இந்த கதியா இருக்கு.. அப்புறம் சினிமா எப்படி இருக்கும்.! பதிலடி கொடுத்த சித்ரா லெட்சுமணன்.
நடிகர் பாக்யராஜ் தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஒரு காலகட்டத்தில் பாக்யராஜை சந்திப்பதற்காகவே ஒரு தெருவை தாண்டி மக்கள் நின்று கொண்டிருப்பார்கள் என்று கூறுவார்கள்.
அதே போல பாக்கியராஜுக்கு வரும் மாலைகளை வாங்கி வைப்பதற்காகவே அவர் நான்கு உதவி இயக்குனர்களை வைத்திருந்தாராம். அந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தவர் பாக்கியராஜ். அதனால்தான் இப்பொழுதும் திரை துறையில் தொடர்ந்து அவருக்கு முக்கியமான இடம் என்பது இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பாக்யராஜ் ஒரு பேட்டிகள் கலந்து கொண்டார் அப்பொழுது பாக்யராஜிடம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்கள் மட்டும் அதிக திரையரங்குகளில் வெளியாகின்றன. சின்ன திரைப்படங்களுக்கு அந்த இடம் கிடைக்கவில்லை என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்பொழுது பதில் அளித்த பாக்கியராஜ் இப்பொழுது பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான டிராகன் திரைப்படம் சின்ன பட்ஜெட் படம் தான். ஆனால் அது அதிக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெறவில்லையா? எனவே மக்கள் நல்ல படமாக இருந்தால் அதை பார்ப்பார்கள் என்று விளக்கி இருந்தார்.
இந்த சமயத்தில் அங்கு அமர்ந்து இருந்த சித்ரா லட்சுமணன் படம் சம்பந்தமில்லாத கேள்விகளை எதற்கு கேட்கிறீர்கள் என்று கேட்டார். அவருக்கு பத்திரிகையாளர்கள் இந்த மாதிரி பதில்களை வைத்து தான் நாங்கள் இந்த செய்தியை பரபரப்பாக்க முடியும் என்று கூறினார்கள்.
உடனே சித்ரா லட்சுமணன் பத்திரிகையாளரான உங்களிடம் இந்த நிலைமை இருக்கும் பொழுது திரைப்படம் எடுக்கும் எங்கள் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.