Cinema History
சினிமால பாடிட்டா நீ பெரிய புடுங்கியா?.. பாரதிராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும் நடந்த சண்டை தெரியுமா?
பாரதிராஜா தமிழ் சினிமாவின் இயக்குனர்களின் இமையம் என அழைக்கப்படுபவர். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நேர்த்தியான பல படங்களை அவர் கொடுத்துள்ளார். சினிமாவிற்கு பாரதிராஜா வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டிருந்த அதே சமயத்தில்தான் அவரை போலவே சினிமாவை மாற்ற இருந்த மற்ற பிரபலங்களும் அலைந்து கொண்டிருந்தனர்.
இளையராஜா, பாரதிராஜா எல்லாம் வாய்ப்பு தேடி கொண்டிருந்தப்போதே எஸ்.பி.பி ஒரு சில படங்களில் பாடல்கள் பாடி பிரபலமாகியிருந்தார். இந்த நிலையில் அப்போது வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன் மூவருக்கும் தன்னுடைய நாடக கம்பெனியில் வேலை வழங்கினார் எஸ்.பி.பி.
இதனால் இவர்கள் நால்வருக்குள்ளும் நல்ல நட்பு உண்டானது. இந்த நிலையில் ஒரு பல்கலைகழகத்தில் விழாவிற்கு எஸ்.பி.பி, பாரதிராஜா,இளையராஜா, கங்கை அமரன் நால்வரும் சென்றிருந்தனர். மதிய உணவு நேரத்தில் அந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பலர் தொடர்ந்து வந்து எஸ்.பி.பியை விசாரித்து சென்றனர்.
ஏனெனில் அப்போது ஒரு சில படங்களில் பணிப்புரிந்ததால் எஸ்.பி.பியை கொஞ்சம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இந்த நிலையில் திடீரென்று சாப்பிடும் இடத்திற்கு வந்த பாரதிராஜா. “என்னடா பெரிய எஸ்.பி பாலசுப்பிரமணியம். சினிமால பாடிட்டா நீ என்ன பெரிய புடுங்கியா” என கேட்கவும் எஸ்.பி.பிக்கு கோபம் வந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். இதனை பார்த்த இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் ஒன்றும் புரியவில்லை. இருவரையும் தடுத்தும் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் திடீரென்று அவர்களே சண்டையை நிறுத்திவிட்டு தோல் மேல் தோல் போட்டு சென்றுள்ளனர்.
பிறகுதான் இது பாரதிராஜாவும் எஸ்.பி.பியும் அனைவரையும் பயமுறுத்த போட்ட ஏற்பாடு என தெரிந்துள்ளது. கங்கை அமரன் தனது புத்தகத்தில் இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார்.