Bigg Boss Tamil
ஜி.பி முத்துவை பார்த்தாலே காண்டாகுது – வன்மத்தை கக்கிய தனலெட்சுமி
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பித்த இரண்டாவது நாளே ஒரு சண்டையாக போய்க்கொண்டுள்ளது. ஆனால் யார் எப்படி சண்டை போட்டால் என்ன? நம்ம ஜாலியா இருப்போம் என பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கும் போட்டியாளர்களில் ஜிபி முத்துவும் ஒருவர்.

இன்று பிக் பாஸ் இல்லத்தில் ஒரு சாம்பாரில் துவங்கிய பிரச்சனை இறுதியாக ஜி.பி முத்துவின் மீது வன்மமாக வெடித்துள்ளது. ஏற்கனவே தனலெட்சுமி மகேஷ்வரியிடம் எதுக்கு சாம்பார் வச்சிங்க, எனக்கு சாம்பார் பிடிக்காது என கூறினார். ஒவ்வொருத்தருக்கும் தனி தனியாக சமைக்க முடியாது என மகேஷ்வரி கூற இருவருக்கும் சண்டை ஆனது.
இந்நிலையில் ஜிபி முத்து தனக்கு சாம்பார் பிடிக்கும் என கூறி தனலெட்சுமியை வெறுப்பேற்றியுள்ளார். இதனால் கடுப்பான தனலெட்சுமி “எனக்கு ஜிபி முத்துவ கண்டாலே காண்டாகுது. நல்லா ஜால்ரா அடிக்கிறார்” என கூறியுள்ளார்.
ஜிபி முத்து பாத்திரங்களை கழுவும் குழுவில் இருக்கிறார். தனலெட்சுமியும் அந்த குழுவில்தான் உள்ளார் என்பதால் இந்த சண்டை இன்னும் வழுப்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
