Connect with us

ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஏமாத்திறீங்களா!.. பூர்ணிமா, விஷ்ணு நட்பால் கடுப்பான மாயா!.. வயித்தெரிச்சலா இருக்குமோ!.

poornima maya

Tamil Cinema News

ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஏமாத்திறீங்களா!.. பூர்ணிமா, விஷ்ணு நட்பால் கடுப்பான மாயா!.. வயித்தெரிச்சலா இருக்குமோ!.

Social Media Bar

Biggboss tamil poornima : பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை ஒவ்வொரு வாரமும் அந்த நிகழ்ச்சியில் பல விஷயங்கள் மாறுபடும். ஒரு வாரம் வில்லனாக தெரியும் ஒரு நபர் அடுத்த வாரம் நல்லவராக தெரிவார். இப்படி வாரா வாரம் நிகழ்ச்சியில் மாற்றங்கள் இருக்கும்.

மூன்று வாரத்திற்கு முன்பு மாயா கேப்டன் ஆனபோது புல்லி கேங் என்கிற ஒரு கூட்டத்தை உருவாக்கினார். அதில் பூர்ணிமா, மாயா, ஜோவிகா, ஐஸ்வர்யா போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் வாரங்கள் செல்லச் செல்ல இந்த புல்லி கேங் முழுதாக கலைந்து விட்டது.

இருந்தாலும் பூர்ணிமாவும் மாயாவும் மட்டும் தொடர்ந்து ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் எப்போதும் பூர்ணிமாவுடன் சண்டை செய்து கொண்டிருக்கும் விஷ்ணு அவரிடம் சமாதானம் பேச துவங்கினார். அதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு உருவானது.

கடந்த சில நாட்களாக இருவரும் ஒன்றாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பி பூர்ணிமாவை கோபப்படுத்தி இருக்கிறார் மாயா. போன வாரம் வரை சண்டை போட்டுவிட்டு இந்த வாரம் எப்படி ஒன்று கூடினீர்கள் எனக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை என்று நேரடியாகவே கேட்டுள்ளார்.

இந்த இருவரின் நட்பு மாயாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியதால்தான் அவர் இப்படி பேசி உள்ளார் என்று இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியிருந்தாலும் கூட ஆள் இருந்ததால் மாயா ஏதோ ஸ்கோர் செய்து கொண்டிருந்தார். இனி அவருக்கு ஸ்கோர் செய்வதே கடினமான காரியமாக இருக்கும் என கூறப்படுகிறது.

To Top