நீ பேசுறது போரடிக்குது பூர்ணிமா!.. பூர்ணிமாவிற்கு ஷாக் கொடுத்த அவரின் அம்மா!..
Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே இன்னமும் வீட்டில் இருந்து வரும் ஒரு சில முக்கியமான போட்டியாளர்களில் பூர்ணிமாவும் ஒருவர். முதலில் புல்லி கேங்குடன் இணைந்து பூர்ணிமா கொஞ்ச நாட்கள் மோசமாக நடந்துக்கொண்டதால் ரசிகர்களுக்கு அவர் மேல் அதிருப்தி ஏற்பட்டது.
ஆனால் அதன் பிறகு தன்னை குறித்து வெளியில் மக்கள் மத்தியில் தவறான பிம்பம் உருவாகி இருப்பதை புரிந்துக்கொண்டார் பூர்ணிமா. இதனை தொடர்ந்து அவர் நல்ல வழியில் விளையாட்டை விளையாட துவங்கினார். பூர்ணிமாவை பொறுத்தவரை அனைவருக்குமே அவர் மீது இருக்கும் அதிருப்தி என்றால் அது அவர் அதிகமாக பேசுவதுதான்.

பூர்ணிமா எந்த ஒரு விஷயம் குறித்து பேச துவங்கினாலும் நாள் கணக்கில் அதுக்குறித்து விவாதித்துக்கொண்டே இருப்பார். இது பார்க்கும் ரசிகர்களுக்கே மனசோர்வை ஏற்படுத்தும். சமூக வலைத்தளங்களில் கூட பலரும் இதை விமர்சித்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸில் போட்டியாளர்களின் பெற்றோர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பல அறிவுரைகளை வழங்கி வந்தனர். அப்போது பூர்ணிமாவின் அம்மா பேசும்போது பூர்ணிமா வெகு நேரம் பேசுவது மிகவும் சோர்வளிக்கும் விஷயமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியான பூர்ணிமா நான் குறைவாகதானே பேசுகிறேன் என கூறினார். அதற்கு பதிலளித்த அவரது தாய் இப்போது நன்றாகதான் விளையாடி வருகிறாய். ஆனால் ஆரம்பத்தில் மிகவும் அதிகமாக பேசி வந்தாய் என கூறியுள்ளார்.