Bigg Boss Tamil
நீங்க லவ் பண்றதுக்கு என்ன யூஸ் பண்றீங்களா!.. ரவீனா அம்மாவிடம் சிக்கிய ரவீனா,மணி ஜோடி!..
Biggboss raveena Mani : பிக்பாஸ் துவங்கியது முதலே அதில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரவீனாவும் மணியும்தான். ரவீனாவும் மணியும் வெகு நாட்களாகவே காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து பாடல்களுக்கு நடனமாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
அதுவே அவர்கள் இருவருக்கும் காதல் உருவாக காரணமாக அமைந்தது. பிக்பாஸிற்குள் வந்து ஒரு சில வாரங்களிலேயே அவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த நிலையில் தற்சமயம் ஒரு வாரம் முழுவதும் இவர்களது பெற்றோரும் போட்டியாளர்களுடன் சேர்ந்து பயணித்து வருகின்றனர்.

ரவீனா பலரிடமும் பேசும்போது தனது காதல் விவகாரம் தன் வீட்டிற்கு தெரியும் என்றே பேசியிருந்தார். ஆனால் தற்சமயம் இந்த விஷயம் குறித்து அவரிடம் பேசிய அவரது தாய் கண்டிக்கும் விதத்தில் பேசியிருக்கிறார். அவருக்கு காதலுக்கு எதிராக பேசியிருப்பது போல தோன்றவில்லை.
ஆனால் அவர் கேட்கும்போது பிக்பாஸ் வீட்டிற்கு விளையாடத்தானே வந்திருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து சுற்றுவதற்கு எதற்கு இங்கு வரவேண்டும் என கேட்டுள்ளார். மேலும் ரவீனாவிடம் நீ காதல் செய்வதற்காக அம்மா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாங்கண்ணு சொல்லி இருக்க என கூறி மிகுந்த கோபமடைந்துள்ளார்.
இதனையடுத்து மணி மற்றும் ரவீனா இருவரையுமே அழைத்து கண்டித்துள்ளார் ரவீனாவின் அம்மா.
