Connect with us

விஜய் சேதுபதியோட தனுஷை கம்பேர் பண்ண கூடாது!.. கடுப்பான போஸ் வெங்கட்!..

dhanush vijay sethupathi

Tamil Cinema News

விஜய் சேதுபதியோட தனுஷை கம்பேர் பண்ண கூடாது!.. கடுப்பான போஸ் வெங்கட்!..

Social Media Bar

Vijay sethupathi and Dhanush: தனுஷ் சினிமாவில் பல வருட காலங்களாக இருந்து வருகிறார். ஆனால் தனுஷிற்கு பிறகு சினிமாவிற்கு வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் பலர். ஆனாலும் தனுஷ் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதை போல வேறு நடிகர்கள் நடிப்பதில்லை.

உதாரணமாக தனுஷ் நடித்து இடையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அந்த படத்தில் சண்டை காட்சிகளே கிடையாது. படக்கதைப்படியே தனுஷிற்கு சண்டை என்றால் பயம்.

ஆனால் வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் மாதிரியான நடிகர்கள் கூட சண்டை காட்சிகள் இல்லாத படங்களில் நடிப்பதில்லை. அதே போல நடிகர் விஜய் சேதுபதியும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். இதுக்குறித்து போஸ் வெங்கட் தனது பேட்டியில் கூறும்போது தனுஷை நாம் அப்படி எடுத்துக்கொள்ள முடியாது.

இப்போதும் தனுஷ் ஓரளவு பெரிய பட்ஜெட் படங்களில்தான் நடிக்கிறார். அவர் கேரவான் வாகனம் இல்லாமல் எந்த படத்திற்கும் நடிக்க வருவதில்லை. உண்மையில் குறைந்த பட்ஜெட் படம் என்றாலும் படத்தின் கதைக்காக இறங்கி வருவது விஜய் சேதுபதிதான்.

விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். கதைக்காவே அந்த படத்தில் நடித்து கொடுத்தார் விஜய் சேதுபதி. எனவே அவர் மட்டுமே நடிப்பு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் ஆவார் என கூறியுள்ளார் போஸ் வெங்கட்.

To Top