Latest News
87 ரூபாய்க்கு BSNL அதிரடி திட்டம்… அன்லிமிடெட் கால்ஸ், டேட்டா மற்றும் கூடுதல் சேவைகள்..!
கடந்த மூன்று வருடங்களாகவே ஜியோ ஏர்டெல் மாதிரியான நிறுவனங்கள் தொடர்ந்து கால் பேசுவதற்கான டாரிஃப் விலையை அதிகரித்து வருகின்றன ஒரு காலத்தில் பத்து ரூபாய்க்கு கார்டு போட்டால் போன் பேச முடியும் என்கிற நிலை இருந்தது.
இப்பொழுது குறைந்தபட்சமாகவே 150 க்கும் அதிகமாக ரிச்சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்கிற நிலை இருக்கிறது. இதனால் வருடத்திற்கு குறைந்தது 3000 ரூபாய் மொபைல் போன் ரீசார்ஜ் க்கு மட்டும் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது.
ரீசார்ஜ் தொகை அதிகரிக்கும் போது ஜிஎஸ்டி தொகையும் அதற்கு ஏற்ற அளவு அதிகரிப்பதால் அரசுமே கூட இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
புது திட்டம்:
இதற்கு நடுவே அரசு சார்ந்த நிறுவனமான bsnl நிறுவனம் மக்களுக்கு உதவும் வகையில் தொடர்ந்து குறைந்த டாரிஃப் விலையில் ரீசார்ஜ் திட்டங்களை கொடுத்து வருகிறது.
இதனால் பலரும் ஏற்கனவே பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு தனது மொபைல் எண்ணை மாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தற்சமயம் 85 ரூபாய்க்கு புதிய சேவை ஒன்றை அறிவித்திருக்கிறது பிஎஸ்என்எல். அதன்படி 87 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலமாக தினசரி 1gb டேட்டா அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை பெற முடியும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
மேலும் காலர் டியூன் ஆப்ஷனும் இந்த பேக்கேஜில் வருகிறது இந்த 87 ரூபாய் பேக்கேஜ் 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் திட்டமாக இது அமைந்திருக்கிறது.