தொழிலதிபரை காசுக்காக திருமணம் செய்த சீரியல் நடிகை.. போலீஸில் புகாரளித்த கணவர்..!

சினிமா நடிகைகளை போலவே இப்பொழுது சீரியல் நடிகைகளும் அதிக பிரபலமாகி வருகின்றனர். எவ்வளவு சீரியல் நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு நாளைக்கான சம்பளம் என்பதும் அதிகமாகவே இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் வாங்கும் சம்பளத்தை விட சீரியல் நடிகைகளின் சம்பளம் அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் நடிகைகள் சீரியல் துறையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படியான ஒரு பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தான் ரிகானா பேகம். இவர் சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு முதல் திருமணம் ஏற்கனவே ஆன நிலையில் ராஜ் கண்ணன் என்கிற தொழிலதிபரை சமீபத்தில் இவர் திருமணம் செய்தார்.

Social Media Bar

முதல் திருமணம் விவாகரத்து ஆனதாக கூறி இவர் இரண்டாவது திருமணத்தை செய்திருக்கிறார். அதற்குப் பிறகு தொடர்ந்து நிறைய செலவுகளுக்காக ராஜ் கண்ணனிடம் ஏதாவது ஒரு தொகையை வாங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்.

இப்படி 20 லட்சம் வரை அவர் மொத்தமாக வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் பணத்துக்காகதான் தன்னை திருமணம் செய்தார் என்று கூறி பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து இருக்கிறார் ராஜ் கண்ணன்.

அதில் அவர் கூறும் பொழுது முதல் முதல் திருமணம் விவாகரத்து ஆகவில்லை அதை மறைத்து தான் இவர் திருமணம் செய்திருப்பதாக கூறி இருக்கிறார் இந்த நிலையில் சின்னத்திரை வட்டாரத்தில் இது இப்பொழுது அதிக பேச்சு பொருளாக இருந்து வருகிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.