Connect with us

சென்சாரில் தடை!.. தளபதிக்கு பாட்டுக்கு வந்த சோதனை..

Cinema History

சென்சாரில் தடை!.. தளபதிக்கு பாட்டுக்கு வந்த சோதனை..

Social Media Bar

வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடித்து சிறப்பாக தயாராகி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் உள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியிலும் லியோ திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருவதாலேயே மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் வெளியான நான் ரெடிதான் வரவா பாடல் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் உள்ள பாடல் வரிகள் விவாதத்திற்குரியதாக இருந்தது. மேலும் படத்தில் அதிகமாக புகை பிடிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விஷயத்தை கருத்தில் எடுத்துக்கொண்ட சென்சார் அமைப்பு நான் ரெடிதான் வரியா பாடலில் வரும் ”பத்தாது பாட்டில் நான் குடிக்க, பத்தவச்சு புகைய விட்டா பவர் கிக்கு, மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளியே வருவாண்டா’ ஆகிய வசனங்களை நீக்க சொல்லியுள்ளது.

அதே போல படத்தில் விஜய் அதிகமாக புகைப்பிடிப்பது போல உள்ள காட்சிகளையும் நீக்க சொல்லியுள்ளது சென்சார் அமைப்பு.

To Top