News
படம் அட்டு ஃப்ளாப்? இயக்குனர் புகார்! எஸ்கேப் ஆன கவர்ச்சி நடிகை!
பேன் இந்தியா படம் எடுத்து சொதப்பியதால் நஷ்டத்தில் உள்ள நடிகை சார்மி சோசியல் மீடியாவை விட்டே வெளியேறிவிட்டாராம்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என இந்திய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியான படம் ‘லைகர்’. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கியிருந்தார்.
பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் போன்றோரை அழைத்து வந்து பிரம்மாண்டமாக படமாக்கியிருந்தார்கள்.
ஆனால் படத்தில் இருந்த பிரம்மாண்டம் கதையில் இல்லாததால் படம் தோல்வியை தழுவியது. இந்த படத்தை பூரி ஜெகன்னாத்தும், தெலுங்கு நடிகை ஷார்மியும் இணைத்து தயாரித்திருந்தனர்.
தற்போது படம் நஷ்டமானதால் விநியோஸ்தகர்கள் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்கள். இதனால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த ஷார்மி தலைமறைவாகியுள்ளாராம்.
விநியோகஸ்தர்கள் மற்றும் பைனான்சியர்கள் தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாக பூரி ஜெகன்னாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாராம்.

மேலும் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி காவல்துறைக்கும் கோரிக்கையும் விடுத்துள்ளாராம். பூரி ஜெகன்னாத்தின் இந்த நிலை கண்டு ஷார்மியும் கலக்கத்தில் உள்ளாராம்.
