Latest News
நானி நடிப்பில் ஒரு புஷ்பாவா? – வரவேற்பை பெறும் தசரா ட்ரைலர்
தெலுங்கு சினிமாவில் வெறுமனே 50 பேரை அடித்து நொறுக்கும் நடிகர்களுக்கு இடையே சிறப்பான கதைகளில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நானி.
நானி நடிக்கும் படங்களில் சண்டை காட்சிகள் குறைவாக இருந்தாலும் நல்ல கதைகளை கொண்டிருக்கும். இதனால் அவரது பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு சின்ன திரையில் ஒளிப்பரப்பாவதுண்டு.
இறுதியாக அவர் நடித்து வெளிவந்த சியாம் சிங்கா ராய் திரைப்படம் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் அடுத்து நானி நடித்து வரும் திரைப்படம் தசரா.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி இன்னும் பலர் நடிக்கின்றனர்.
இந்த நிலக்கரி தொழிற்சாலையில் பணிப்புரியும் மக்களை கொண்டு கதை செல்கிறது. இந்த படத்தில் இவர் ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் இருக்கும் அதே கெட்டப்பில் நானி இந்த படத்தில் வருகிறார்.
இதன் ட்ரைலர் நேற்று வெளியான நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்