Connect with us

விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுத்த  முதல்வர்.. இப்படி ஒரு பதில் வரும்னு எதிர்பார்க்கல..!

stalin vijay

News

விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுத்த  முதல்வர்.. இப்படி ஒரு பதில் வரும்னு எதிர்பார்க்கல..!

Social Media Bar

நடிகர் விஜய் கட்சி துவங்கிய பிறகு தொடர்ந்து விஜய் குறித்த செய்திகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வைரலாக துவங்கியிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் மாநாடு ஒன்றை நடத்திய விஜய் அதில் பேசிய விஷயங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் இதற்கு முன்பு வரை பெரிதாக அரசியல் குறித்து பேசாமல் இருந்து வந்த விஜய் நிறைய விஷயங்களை மாநாட்டில் வெளிப்படையாக பேசியதால் இதற்கு முன்பு நாம் பார்த்த விஜய் தானா? இது என்று ஒரு பக்கம் பலருக்கும் அது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இன்னொரு பக்கம் படத்தில் வரும் வசனங்கள் போல விஜய்யின் உரையாடல் இருந்தது என்று விமர்சனமும் இருந்து வந்தது. இந்த நிலையில் திமுக கட்சி குறித்து பெயரை மட்டும் குறிப்பிடாமல் நேரடியாகவே நிறைய விஷயங்களை பேசி இருந்தார் விஜய்.

முதல்வர் கொடுத்த பதில்

அந்த விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தது. அதேபோல நாம் தமிழர் கட்சியின் சீமான் குறித்தும் சில விஷயங்களை விஜய் பேசியிருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே விஜய் பேசிய பேச்சுக்கு சீமான் பதிலடி கொடுத்திருந்தார்.

தற்சமயம் முதல்வர் ஸ்டாலினும் கூட விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது புதிதாக கட்சியை துவங்குபவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என்று பேசுகிறார்கள். ஆனால் நாம் அவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்க தேவையில்லை.

வாழ்க வசவாளர்கள். தேவையில்லாமல் நாங்கள் எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவே இவர்களை எல்லாம் கடந்து சென்று விடுங்கள் என்று கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த பேச்சு தற்சமயம் வைரலாக துவங்கி இருக்கிறது.

To Top