Cinema History
ஒரே கதையை 6 தடவை படமாக்கி எல்லாமே சூப்பர் ஹிட்!.. சின்னப்ப தேவர் செய்த சம்பவம்!.. இது தெரியாம போச்சே…
தமிழ் சினிமாவில் ஒரே கதையை திரும்ப திரும்ப படமாக்குவது என்பது அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஆனால் அப்படி படமாக்கும்போது அனைத்து முறையும் அது ஹிட் கொடுக்குமா என்பது சந்தேகம்தான். உதாரணத்திற்கு பெரிய இடத்து பெண் கதையை அடிப்படையாக கொண்டு சகலகலா வல்லவன் திரைப்படத்தை இயக்கினர்.
இரண்டுமே நல்ல வெற்றிதான். ஆனால் தில்லானா மோகனாம்பாள் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சங்கமம் பெரிய வெற்றியை தரவில்லை. ஆனால் தமிழில் ஒரே கதையை 6 தடவை வரிசையாக எடுத்து ஹிட் கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது.
1969 இல் தேவர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் துணைவன். கணவன் மனைவி இருப்பார்கள் அவர்கள் பிரிவதற்கு பக்தி காரணமாக இருக்கும். இதுதான் கதை இதே கதையை வைத்துக்கொண்டு அவர்கள் பிரிவதற்கான காரணத்தை மட்டும் ஒவ்வொரு படத்திலும் மாற்றினார்கள்.
அதே கணவன் மனைவி ஆனால் அவர்கள் பிரிய இப்போது காரணமாக இருப்பது ஒரு பாம்பு. இதுதான் வெள்ளிகிழமை விரதம் படத்தின் கதை. அதே கதையில் இருவரையும் பிரிக்க ஒரு ஆட்டை வைத்தால் அது ஆட்டுக்கார அலமேலு.
அதே கதையில் நடுவில் ஒரு மாட்டை வைத்தால் அது கோமாதா எங்கள் குலமாதா படம். யானையை வைத்தால் அது நல்லநேரம் திரைப்படம். இந்த எல்லா திரைப்படத்தையும் சின்னப்ப தேவர்தான் தயாரித்தார் என்பது முக்கியமான விஷயமாகும்.
மக்களுக்கு எந்த மாதிரியான கதை பிடிக்கிறது என்பதை அறிந்து அந்த கதைகளில் சின்ன சின்ன மாறுதல்களை செய்து படத்தை வெளியிட்டார் தேவர் அந்த படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்