News
அவனை இந்த கேள்வி கேக்குறீங்களே!.. நீங்க பெரிய ஒழுங்கா!.. வெற்றிமாறனுக்கு ரிப்ளே கொடுத்த நெட்டிசன்!.
சினிமாவில் தற்பொழுது புது முக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் அறிமுகமாகி கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அறிமுகமாகும் இயக்குனர்களும், நடிகர்களும், இயக்குனர்களும், சினிமா பின்புலத்தைக் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு திரையுலகில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் எளிதாக நுழைந்து விடுவார்கள். அதன் பிறகு அவர்களை நிரூபிப்பதற்கு போராட வேண்டி இருக்கும்.
ஆனால் சினிமாவில் நுழைவதற்கே இங்கு பலரும் கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் திறமை இருந்தும் பலருக்கும் இங்கு வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது.
சினிமாவில் புதுமுகமாக அறிமுகமாகும் பலர் ரியாலிட்டி ஷோ மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.
அந்த வகையில் சினிமா துறைக்கு திறமையாக உள்ள இயக்குனர்களை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது நாளை இயக்குனர் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் வெற்றிமாறன் நடுவராக கலந்து கொண்ட போது ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சி
கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, அல்போன்ஸ் புத்திரன் போன்ற திறமையான பல நடிகர், இயக்குனர்களை கோலிவுட்டிற்கு அறிமுகப்படுத்தியது.
இந்நிகழ்ச்சி பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியின் மூலம் ஜிகர்தண்டா, பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த இயக்குனர் சுப்புராஜ் அறிமுகமானார். எந்த ஒரு இயக்குனரிடமும் உதவியாளராக இல்லாமல் இந்நிகழ்ச்சியின் மூலம் திறமையை வெளிப்படுத்தி தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மட்டும் அறிமுகமாகவில்லை விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்களும் இதன் மூலமாகத்தான் கோலிவுட்டிற்கு சிறந்த நடிகர்களாக கண்டெடுக்கப்பட்டனர்.
வெற்றிமாறனை வசை பாடிய நெட்டிசன்கள்
இந்நிலையில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட வெற்றிமாறன் ஒரு குறும்பட இயக்குனர் ஒருவரின் படத்தை பார்த்துவிட்டு அவரை பல கேள்விகள் கேட்டுள்ளார். அந்த குறும்படத்தில் கருப்பா இருக்கிறவன் எல்லாம் தவறு செய்வானா? ஏன் அப்படி காண்பித்துள்ளீர்கள்? அப்போ குப்பை பொறுக்குறவன் செல்போன் பயன்படுத்தக்கூடாதா? நீங்கள் உங்கள் அண்ணன் தங்கை எல்லாரும் போன் யூஸ் பண்ணலாம். ஆனால் குப்பை பொறுக்கும் ஒருவன் மொபைல் பயன்படுத்தக்கூடாது.
ஏனென்றால் அந்த மொபைலால் அவன் கெட்டுவிடுவான். அவன் குப்பை பொறுக்கிக் கொண்டு அங்கே தான் இருக்க வேண்டும். இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? எந்த ஒரு தெளிவுமே இல்லாமல் படத்தை ஏன் எடுக்கிறீர்கள்? என அவரை சரமாரியாக கேள்வி எழுப்பியிருப்பார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் வெற்றிமாறனை விளாசி உள்ளார்கள். இவரை இவ்வாறு கேள்வி கேட்கிறீர்களே நீங்கள் மட்டும் எவ்வாறு பாடம் எடுக்கிறீர்கள் என பலரும் பலவிதமான கமெண்ட்களை செய்து வருகிறார்கள். உங்கள் படத்தில் கருப்பாக உள்ள யாரும் நடிக்கவில்லையா? அவர்கள் தவறு செய்வது போல் நீங்கள் காட்டவில்லையா? என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
