TV Shows
சின்ன திரை முதல் வெள்ளி திரை வரை குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார்? வெளியான லிஸ்ட்..!
விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது
இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த ஐந்து வருடங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன.
ஆரம்பத்தில் மூன்று சீசன்களில் சிவாங்கி முக்கிய கோமாளியாக இருந்து வந்தார். அதற்கு பிறகு நான்காவது சீசனில் அவரே குக்காக வந்தார். அதற்கு பிறகு ஐந்தாவது சீசனில் மணிமேகலை தொகுப்பாளினியாக மாறினார்.
இந்த நிலையில் தற்சமயம் ஆறாவது சீசனுக்கு கோமாளியாக புதிதாக நிறைய நபர்களை விஜய் டிவி இறக்கியுள்ளது. பிக்பாஸ் மூலம் பிரபலமான சௌந்தர்யா களம் இறங்கியுள்ளார். அது மட்டுமின்றி பூவையர், சுனிதா, டாலி இன்னும் பலர் கோமாளியாக களம் இறங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் போட்டியாளராக யார் யாரெல்லாம் களம் இறங்க இருக்கின்றனர் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி நடிகை ப்ரீத்தி சஞ்சீவ், தீபக், பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, வடிவுக்கரசி ஆகியோர் குக்காக களம் இறங்க இருக்கின்றனராம்.
