TV Shows
இப்போ புதுசா களம் இறங்குறோம்… மாற்றம் கொண்டு வந்த குக் வித் கோமாளி டீம்.. வெளியான ப்ரோமோ..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது.
பெரும்பாலும் சமையல் நிகழ்ச்சிகள் என்பவை மிகவும் சீரியசான ஒரு நிகழ்ச்சியாக செல்பவையாக இருக்கும். ஆனால் குக் வித் கோமாளியை பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியானது ஜாலியான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது ஐந்து சீசன்களாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்து அதன் ஆறாவது சீசன் துவங்கப்பட இருக்கிறது வெளியானது முதலே முக்கியமான ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது வழக்கமாக குக் வித் கோமாளிகள் இருப்பது போன்ற இந்த முறை இருக்காது என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் ஐந்து சீசன்களாக ஒரே மாதிரி இந்த நிகழ்ச்சி செல்வது பலருக்குமே அலுப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதால் இப்பொழுது நிகழ்ச்சியில் மாற்றங்களை செய்துள்ளதாக குக் வித் கோமாளி டீம் கூறி இருக்கிறது.
