ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே! – வெள்ளை புடவையில் கலக்கும் தர்ஷா குப்தா..!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கதாநாயகி ஆவதற்கான முயற்சியை பல நடிகைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து நடிகை ஆவதற்கான வாய்ப்புகளை எடுத்து வருகிறார்.

தர்ஷா குப்தா தமிழில் முதன்முதலாக சின்னத்திரை மூலமாக அறிமுகமானார். விஜய் டிவியில் வரும் நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.

ஆனாலும் பெரிதாக மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இல்லாமலே இருந்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி தொடரின் இரண்டாவது சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது குக் வித் கோமாளி நடிகை தர்ஷாவை பலருக்கும் அறிமுகம் செய்து வைத்தது.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை தேடத் தொடங்கினார் தர்ஷா குப்தா. திரைப்படங்களில் பல காலம் வாய்ப்பு தேடிய பிறகு ருத்ர தாண்டவம் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் தர்ஷா குப்தா. 

அதனை ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இன்னமும் பெரிதாக எந்த படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக தொடர்ந்து முயற்சித்து வரும் தர்ஷா குப்தா அழகிய சில புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அவை ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.