ஒட்டு துணி கூட இல்லை ! – ரோஜாவை வைத்து சென்சார் கட் செய்த தர்ஷா குப்தா!
விஜய் டிவியில் டிவி சீரியல்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. சீரியலில் நடித்த வரை அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு குக் வித் கோமாளி இரண்டாம் சீசனில் தர்ஷா குப்தாவிற்கு குக்காக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி நடைப்பெற்ற காலத்தில் தர்ஷா வெகுவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இந்த பாப்புலாரிட்டியை அப்படியே தக்க வைத்து கொள்வதற்காக உடனே மாடர்னுக்கு மாறினார் தர்ஷா.

தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் அவருக்கு மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து ஓ மை கோஸ்ட் எனும் திரைப்படத்தில் தற்சமயம் நடித்திருந்தார். நேற்று காதலர் தினத்தை சிறப்பிக்கும் விதமான உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் ரோஜாவை வைத்து உடலை மறைத்து போட்டோ வெளியிட்டுள்ளார். இவை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
