வரவேற்பை பெரும் ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் – டிசி லீக்ஸ் ஆஃப் சூப்பர் பெட்ஸ்

செல்லப்பிராணிகள் என்றாலே அவை மிகவும் மகிழ்ச்சி ஊட்டுபவை. எந்த ஒரு தவறு செய்தாலும் அவற்றை நாம் அடிக்கவே மாட்டோம். அதனால்தான் அவற்றை செல்லப்பிராணி என அழைக்கிறோம்.

நமக்கு செல்ல பிராணிகள் இருப்பது போலவே சூப்பர் ஹீரோக்களுக்கும் செல்ல பிராணிகள் இருக்கும் அல்லவா. அவற்றிற்கு சூப்பர் சக்திகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாக எடுக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம்தான் டிசி லீக்ஸ் ஆஃப் சூப்பர் பெட்ஸ். 

சூப்பர் மேன், பேட் மேன் போன்ற கதாபாத்திரங்களுக்கு செல்லப்பிராணிகள் இருக்கின்றன. இவற்றிற்கு ஏற்கனவே சக்திகள் உள்ளன அவற்றை கொண்டு சூப்பர் ஹீரோக்களோடு சேர்ந்து இவையும் உலகை காப்பாற்றுகின்றன.

இந்நிலையில் விலங்குகள் காப்பகத்தில் உள்ள பல விலங்குகளுக்கும் சூப்பர் பவர் வந்துவிடுகிறது. இதையடுத்து என்ன நிகழ போகிறது. யார் வில்லன் என கதை செல்கிறது.

ஒட்டு மொத்தமாக சிறுவர்களுக்கு ஒரு சிறந்த எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக லீக்ஸ் ஆஃப் சூப்பர் பெட்ஸ் அமைந்துள்ளது. 90ஸ் கிட்ஸ்கள் தங்களுடைய பால்ய வயதில் கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் க்ரிப்டோ த சூப்பர் டாக் என்கிற கார்ட்டூனை பார்த்திருப்பார்கள்.

அந்த க்ரிப்டோ என்னும் நாய் சூப்பர் மேனின் செல்ல பிராணியாகும். அது இந்த படத்திலும் இருப்பதால் 90ஸ் கிட்ஸ் பலரும் கூட இந்த படத்திற்கு போக வாய்ப்புகள் உள்ளன. 

இந்த படத்தை பார்த்த பலரும் திரைப்படம் நகைச்சுவையாகவும் அதே சமயம் எண்டர்டெயின்மெண்டாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.

எப்படி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள டிசி லீக்ஸ் ஆஃப் சூப்பர் பெட்ஸ் வார இறுதியில் திரையரங்குகளில் குடும்பத்தோடு பார்க்க உகந்த படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டி ஒன்றை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளது.

Refresh