Cinema History
கொரோனா காலக்கட்டத்தில் நான் செத்துட்டேன்னு சொன்னாங்க!.. நடிகைக்கு நடந்த கொடுமை..
கொரோனா காலகட்டமானது பொதுமக்களில் துவங்கி பல துறைகளில் இருந்தவர்களையும் வெகுவாக பாதித்த ஒரு காலகட்டமாகும். அதே சமயம் திரைத்துறையையும் பெரிதாக பாதித்தது இந்த காலகட்டம். முக்கியமாக நடிகர்கள் குறித்த புரளிகள் அதிகமாக வலம் வந்த காலகட்டமாக கொரோனா காலகட்டம் இருந்தது.
அந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சில நடிகர் நடிகைகளில் முக்கியமானவர் தீபா வெங்கட். தீபா வெங்கட் பல காலங்களாக நாடகங்கள் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கண்டேன் காதலை போன்ற திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தற்சமயம் பேட்டியில் கூறும் பொழுது யூ ட்யூப்பில் கொரோனா காலகட்டத்தின்போது நான் இறந்து விட்டதாக ஒரு வீடியோவை பகிர்ந்தனர்.
அதன் பிறகு பல youtube சேனல்கள் அதேபோல நான் இறந்து விட்டதாக வீடியோவை பகிர்ந்தனர். இது சமூக வலைதளங்கள் மீது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது எனவேதான் எந்த ஒரு youtube சேனலுக்கும் நான் பேட்டியளிக்காமல் இருந்தேன் என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
