Connect with us

எக்ஸ்ட்ரா டயலாக் பேசி கமலுக்கே டஃப் கொடுத்த டெல்லி கணேஷ்… அதிர்ச்சியடைந்த உலக நாயகன்!..

Cinema History

எக்ஸ்ட்ரா டயலாக் பேசி கமலுக்கே டஃப் கொடுத்த டெல்லி கணேஷ்… அதிர்ச்சியடைந்த உலக நாயகன்!..

cinepettai.com cinepettai.com

தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படி ஒரு அந்தஸ்தை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் கமலஹாசன்.  வெறும் கமர்சியல் படம் என்று மட்டும் அல்லாமல் பல்வேறு புதுவித கதைகளை தமிழ் சினிமாவில் செயல்படுத்தி பார்த்தவர் கமலஹாசன்.

 உதாரணமாக அவர் நடித்த அன்பே சிவம், ஆளவந்தான், குணா போன்ற திரைப்படங்கள் எல்லாம் இதுவரை நடித்துவரும் எந்த ஆக்ஷன் கதாநாயகனும் தொடாத இடங்களாகும். அந்த அளவிற்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர் நடிகர் கமல்ஹாசன்.

மணிரத்தினத்திற்கும் கமலுக்கும் மிக முக்கிய படமாக அமைந்த திரைப்படம் நாயகன். அதற்கு முன்பு வரை மணிரத்தினத்திற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக அங்கீகாரம் இல்லாமல் இருந்தது ஆனால் நாயகன் திரைப்படம் அவருக்கு ஒரு அங்கீகாரத்தை உருவாக்கியது. இத்தனைக்கும் நாயகன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் பெரிதாக ஓடவில்லை ஆனால் அதற்குப் பின்னர் இந்த படம் வெகுவாக பேசப்பட்டது.

 அந்த திரைப்படத்தில்  நடிகர் டெல்லி கணேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டெல்லி கணேஷ் கமலுடன் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளார் அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் டெல்லி கணேசன் கையில் அடிபட்டிருக்கும் அப்பொழுது கமல் அவரை சந்தித்து பேசுவார் 

அந்த காட்சியில் சொல்லிக்கொடுத்த வசனத்தை விடவும் அதிகமாக சில வசனங்களை டெல்லி கணேஷ் பேசியிருப்பார். ஆனால் அதையும் சரியாக மேட்ச் செய்திருப்பார் கமல். இதனாலேயே கமலுக்கு டெல்லி கணேசனை பிடித்து விட்டது இது குறித்து டெல்லி கணேஷ் ஒரு முறை தனது பேட்டியில் கூறியிருந்தார்.

POPULAR POSTS

kota srinivasa rao
santhanam sundar c
manikandan kavin
karathe raja prakash raj
To Top